ஜார்ஜ்டவுன், ஜூலை.16-
பினாங்கு, ஹொங் செங் தோட்டத்தில் பூட்டப்பட்டு இருந்த வீட்டில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றப் புகாரைத் தொடர்ந்து போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க பாகான் ஜெர்மால் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 79 வயது முதியவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக அந்த முதியவரின் சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.








