Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இந்தியாவின் போதைப் பொருள் கடத்தல் மன்னன், மலேசியாவில் பிடிபட்டான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியாவின் போதைப் பொருள் கடத்தல் மன்னன், மலேசியாவில் பிடிபட்டான்

கோலாலம்பூர், மே.31-

இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், மலேசியாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இந்திய போலீசாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், இந்திய போலீசாரிடமிருந்து தப்பிக்க மலேசியாவில் பதுங்கியிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த மே 13 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த இந்தியப் பிரஜை பிடிபட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

அன்றைய தினம் அதிகாலை 1.35 மணியளவில், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் அந்த இந்தியப் பிரஜை தப்பிக்க இயலாமல் பிடிபட்டதாக டான் ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.

இதனிடைய மலேசியாவில் பிடிபட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னனின் பெயர் நவீன் சிக்கார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. கடந்த மே 28 ஆம் தேதி அவன், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு, இந்திய போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை