கோலாலம்பூர், டிசம்பர்.02-
தமது முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மீதான விசாரணையில் இன்னமும் அதிருப்தி கொண்டு இருக்கும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடும் விமர்சனம் செய்தார்.
தம்முடைய முன்னாள் செயலாளர் என்பதற்காக ஷாம்சுலுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் எந்தவொரு சலுகையும் காட்டவில்லை குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ அன்வார், தமது முன்னாள் உதவியாளர் மற்றவர்களைப் போலவே கைவிலங்கிடப்பட்டுள்ளார். S
எஸ்பிஆராஎம் ஆரஞ்சு டி - சட்டையை அணிந்து இருக்கிறார். இன்னமும் தம்மை என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்று அன்வார் வினவினார்.
என் உதவியாளர் கைது செய்யப்பட்ட போது, நான் ஒரு வார்த்தைகூட, எஸ்பிஆர்எம்மைச் நோக்கி சொல்லவில்லை. அவர்கள் சுதந்திரமாக விசாரணை செய்யலாம். நான் தலையிட மாட்டேன் என்று மட்டுமே எனது நிலைப்பாட்டை சொன்னேன் என்று மக்களவையில் டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.








