Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இடிஎஸ், கொமுட்டர் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இடிஎஸ், கொமுட்டர் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின

கோலாலம்பூர், ஜூன்.21-

நேற்று கம்பார் - சிலிம் ரிவர் இடையிலான தொடர் வண்டி தடத்தில் மின்சாரம் தடைப்பட்டதால், பாதிக்கப்பட்ட இடிஎஸ் தொடர்வண்டி சேவையும் கேடிஎம் கொமுட்டர் சேவையும் இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக இயங்கத் தொடங்கின. இந்த இடையூறு காரணமாகப் பயணிகளின் சேவை சீராக இயங்கவில்லை என்றும், பல தொடர் வண்டிகள் தாமதமாக இயங்கின என்றும் கெரெதாபி தானா மெலாயு பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, செயல்பாட்டுச் சீர்மை ஆகியவற்றுக்காக, பாதிக்கப்பட்ட தடத்தில் தொடர்வண்டிகள் ஒரு தடத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், எட்டு இடிஎஸ் சேவைகளும், இரண்டு கேடிஎம் கொமுட்டர் சேவைகள் 60 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமாயின.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →