Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை
தற்போதைய செய்திகள்

அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை

Share:

கிளந்தான்,ஜூலை 27-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Nenggiri சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் DAP விலகியிருக்க வேண்டும் என்று தாம் கூறியதாக கூறப்படுவதை குவா மூசாங் அம்னோ டிவிஷன் தலைவரும், மூத்த அரசியவாதியுமான Tengku Razaleigh Hamzah மறுத்துள்ளார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலில் DAP பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மட்டுமே தாம் கூறியதாக Tengku Razaleigh குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதி மலாய்க்காரர்கள் நிறைந்த பகுதியாகும். அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு DAP தலைவர்கள் அழைக்கப்படுவார்களா என்று ஒரு கேள்வி தம்மிடம் முன்வைக்கப்பட்டதாக Tengku Razaleigh தெரிவித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே தாம் அவ்வாறு சொன்னதாகவும், ஆனால், DAP இடைத் தேர்தலிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று தாம் கூறவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சருமான Tengku Razaleigh தெளிவுபடுத்தினார்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை