May 21, 2026
Thisaigal NewsYouTube
உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்த வர்த்தக மாநாடு
தற்போதைய செய்திகள்

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்த வர்த்தக மாநாடு

Share:

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து 'உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டு நிறைவு விழா' -வை ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வை மெருகூட்டும் வகையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர். வி. ராதா கிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தூதர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாட்டு தொழில் வல்லுநர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்களும், பெண் தொழில் முனைவோர்களும், எம்.பி.ஏ மாணவர்களும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் கலந்து பயனடைந்தனர்.

நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறித்தும், குறுந்தொழிலில் கடன் பெரும் வசதிகள் பற்றியும் வங்கி அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

Related News