Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

கோலாலம்பூர் மாநகர் மன்றம், இனி வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது! வெள்ளம் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட, செயற்கை நுண்ணறிவு கொண்ட சென்சார்கள் நகரத்தின் ஆறுகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான அளவை எட்டும் போது, இந்தச் சென்சார்கள் நேரடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பும் என டத்தோ பண்டார் கோலாலம்பூர், டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிஃப் தெரிவித்தார். இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் முடியும் என்றார்.

Related News