காச நோய் கண்டவர்கள், தொடர் சிகிச்சை பெறாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa எச்சரித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காச நோயினால் கடந்த ஆண்டு 2,527 பேர் மரணம் அடைந்துள்ள வேளையில் அதற்கு முந்திய ஆண்டு 2,288 பேர் உயரிழந்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 284 பேராக அதிகரித்துள்ள வேளையில் இறப்பு விகிதத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அந்த நோய் பரவாமல் தடுப்பதற்கும் காச நோய் கண்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகும் என்று Dr Zaliha Mustafa விளக்கினார்.








