Mar 13, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.22-

தற்காப்பு அமைச்சின் வியூக மாற்றங்களில் ஒரு முக்கிய உந்துசக்தியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்புத் தொழில்துறை கொள்கையான DIPN தொடங்கப்பட்டதன் மூலம், மலேசியா உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பாட்டில் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது.

இந்தக் கொள்கையானது அமைச்சின் முக்கிய மாற்றங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

DIPN மூலம், நாம் நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

பொது மற்றும் தனியார் துறைகளுக்கிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் உள்ளூர் திறன்களை வலுப்படுத்துவதே DIPN-இன் முக்கிய நோக்கம் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதை குறைப்பதே இதன் பிரதான இலக்காகும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புத் தொழில்துறை கொள்கையான DIPN-ஆனது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்