Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மோசடியில் தமது சேமிப்பை இழந்தார் முதியவர்
தற்போதைய செய்திகள்

மோசடியில் தமது சேமிப்பை இழந்தார் முதியவர்

Share:

தங்காக், ஆகஸ்ட்.02-

ஜோகூரில் பேங்க் நெகாரா அதிகாரி எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபரிடம் முதியவர் ஒருவர் 57 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமானத் தொகையைப் பறி கொடுத்துள்ளார்.

தமக்கு ஒரு குறுந்தகவல் வந்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே பேங்க் நெகாரா அதிகாரி எனத் தாம் நம்பி விட்டதாகவும் பணத்தை இழந்த 69 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

அம்முதியவர் இணையம் வாயிலான வங்கிச் செயலி விவரங்களைக் கொடுத்த நிலையில், அந்த நபர் உடனடியாக நான்கு பணப் பரிவர்த்தனையின் மூலம் 57 ஆயிரத்து 290 ரிங்கிட்டை வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார். அதன் பிறகே தமது சேமிப்பில் இருந்த அனைத்து பணமும் காணாமல் போனதை அம்முதியவர் உணர்ந்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.

அம்முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் அச்சம்பவம் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News