Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கல்வித்துறையில் பணக்காரர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்படலாம் / பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோடிக்காட்டினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கல்வித்துறையில் பணக்காரர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்படலாம் / பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோடிக்காட்டினார்

புத்ராஜெயா,செப்டம்பர் 30-

கல்வித்துறையில் அரசாங்கம் வழங்கி வரும் உதவித்தொகை, பணக்காரர்களுக்கு நிறுத்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிக்காட்டியுள்ளார்.

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தப்படவிருக்கும் முமுக்கிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அறிவியல் இடைநிலைப்பள்ளிகளில் பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் பிள்ளைகளும் பயில்கின்றனர். இதர மாணவர்களுடன் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்கம் உதவித் தொகை வழங்கி வருகிறது. இது மிகப்பெரிய செலவினமாக கருதப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கத்தன் உதவித் தொகை மற்றும் உதவித் திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களை சென்றடை வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் உதவித் தொகைகள், பணக்காரர்களுக்கும், வசதிப்படைத்தவர்களுக்கும் எதற்காக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

இன்று திங்கட்கிழமை புத்ராஜெயாவில் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →