May 21, 2026
Thisaigal NewsYouTube
வெளி ஆலோசகர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம் !
தற்போதைய செய்திகள்

வெளி ஆலோசகர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம் !

Share:

வெளி ஆலோசகர்களின் சேவையைப் பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்தி விட்டது. தேவை இருப்பின் மட்டுமே, வெளியில் இருந்து சேவைகள் பெறப்படும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் முஹமாட் சுக்கி அலி தெரிவித்தார்.

வெளி ஆலோசகர்களின் சேவைகளை நம்பாமல், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களின் திறனில் பிரதமர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை கொண்டுள்ளதை சுட்டிக் காட்டி முஹமாட் சுக்கி அலி பேசினார்.

அரசு ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்தி அரசாங்க மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதால், அரசாங்கத்தின் வீண் செலவைக் குறைக்க முடியும் என்று சுக்கி iகூறினார்.

வளர்ச்சித் திட்டத்தில் தேவையான துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் பயிற்சி பெற தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News