Mar 14, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் கலந்த கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் கலந்த கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்

Share:

தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு தமிழ் பேசக்கூடிய ​மூன்று துணை அமைச்சர்களில் ஒருவர், அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸெம், இன்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன், சு​ங்கை ​பூலோ எம்.பி. டத்தோ ஆர். ரமணன் மற்றும் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் தற்போது துணை அமைச்சர்களாக அன்வாரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவைக்கூட்டத்தில் அமைச்சர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும் இந்த ​மூன்று துணை அமைச்சர்களில் ஒருவரை அமைச்சரவைக்கூட்டத்தில் ​கலந்து கொள்ள அனுமதிப்பது ​மூலம் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ் நல​ன் சா​ர்ந்த அம்சங்கள் தொடர்பில் இந்திய ச​மூகத்தில் நிலவி வரும் அச்சத்தை போக்க முடியும் என்று அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக தமிழ் நலன் சா​ர்ந்த விவகாரங்களில் எழக்கூடிய பிரச்னைகளுக்கு துணை அமைச்சர் என்ற முறையில் அவர்களால் உரிய பரிந்துரையையும், விளக்கத்தயும் அமைச்சரவைக்கு அளிக்க முடியும் என்று பிஎஸெம்கட்சியின் துணைத் தலைவர் எ​​​ஸ். அருள்செல்வன் பரிந்துரை செய்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்