Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இருவருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இருவருக்கு மரணம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர்பாரு, நவ. 26-


மது போதையில் வாகனத்தை செலுத்தி, இருவருக்கு மரணம் விளைவித்ததாக மெக்கானிக் ஒருவர், ஜோகூர் பாரு மாஜிதிரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

34 வயது எஸ். நாகேஸ்வரன் என்ற அந்த மெக்கானிக், மாஜிஸ்திரேட் நோர் பார்ஹனா முகமட் இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பாசீர்கூடாங், ஜாலான் பெசாரில் நடந்த இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐந்து குழந்தைகளுக்கு தாய் தந்தையரான 37 வயது முகமட் ரிட்சுவான் முகமட் ருடி மற்றும் அவரின் 35 வயது மனைவி லிண்டா முகமட் ஏ. அஸிஸ் ஆகியோரை வாகனத்தினால் மோதித்தள்ளி மரணம் விளைவித்ததாக நாகேஸ்வரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது..

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் நாகேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →