Oct 23, 2026
Thisaigal NewsYouTube

பட்டதாரிகளுக்கு மாதம் 50 ரிங்கிட் மட்டுமே பிடிபிடிஎன் கடன் தவணை: புதிய சலுகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பட்டதாரிகளுக்கு மாதம் 50 ரிங்கிட் மட்டுமே பிடிபிடிஎன் கடன் தவணை: புதிய சலுகை

மாதம் 2,501 முதல் 3,000 ரிங்கிட் வரை வருமானம் பெறும் பட்டதாரிகள், தேசிய உயர்கல்விக் கடன் நிதியகமான பிடிபிடிஎன் கடனை மாதம் குறைந்தபட்சம் 50 ரிங்கிட் செலுத்தினால் போதும் என துணைக் உயர்க்கல்வி அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையால் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என அவர் கூறினார்.

மாத வருமானம் 2,500 ரிங்கிட்டுக்குக் குறைவாக உள்ள பட்டதாரிகள், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை எட்டும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →