May 21, 2026
Thisaigal NewsYouTube
இரு மாணவர்கள் கடத்தப்பட்டனரா?
தற்போதைய செய்திகள்

இரு மாணவர்கள் கடத்தப்பட்டனரா?

Share:

பகாங், Bera வட்டாரத்தில் பள்ளி ஒன்றிலிருந்து இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டதாக நேற்று முதல் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் பொய்யானதாகும் என்று Bera மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zulkiflee Nazir தெரிவித்தார்.

இத்தகவல் தொடர்பாக மாவட்ட போலீசார் நடத்திய தீவிர புலன் விசாரணையில் அந்த தகவலில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர், Kerayong தேசிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த இரு மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவ்விடத்திலிருந்து சென்று விட்டதாகவும் அந்த மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் சமூக வலைத்தளஙகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய புலன் விசாரணையில் அப்படியொரு சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக Zulkiflee Nazir மேலும் கூறினார்.

Related News