Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மதுபானம் விற்பனைத் தடை விரிவுப்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஈப்போ, ஜன. 18-


முஸ்லீம்கள் பெரும்பான்மையிரான கொண்ட பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் தடையை ஈப்போ மாநர் மன்றம் விரிவுப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

பேரா மாநிலத்தில் மஞ்சோயில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனையை தடை செய்வதற்கான கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுமானால் அப்பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ருமாஸி பஹாரின் தெரிவித்தார்.

கோரிக்கை விடுக்கப்படுகின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கும் கொள்கை குறித்து ஏற்கனவே ஈப்போ மாநகர் மன்ற அளவில் முடிவு செய்யப்பட்டு விட்டதையும், அந்த கொள்கை நடைமுறையில் இருப்பதையும் டத்தோ ருமாஸி சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →