Oct 9, 2026
Thisaigal NewsYouTube

போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.26-

பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படை தனது விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த மாணவியின் நெருங்கிய உறங்கினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஓர் ஆற்றல் வாய்ந்த மகளைப் பறி கொடுத்த சோகம் அந்த மாணவியின் குடும்பத்தை மட்டும் அல்ல, தங்களையும் வாட்டி வதைத்து வருவதாக அந்த அந்த மாணவியின் மாமாவான டத்தோ ராஜ் பால் சிங் தெரிவித்தார்.

பல்கலைக்கழக தங்கும் விடுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதும் வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்நிலையில் தங்கள் உறவுக்காரப் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமாக இருந்த நபர் கைது செய்யப்படுவதற்கு போலீசார் தனது விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த பெண்ணின் நல்லடக்க சடங்கில் கலந்து கொண்ட டத்தோ ராஜ் பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →