காரும் லோரியும் மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு சிறார்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று மாலை 4.06 மணியளவில் கெடா, கூலீம், பாடாங் மெஹா, ஜாலான் கூலிம்-பாலிங் சாலையில் நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பயணம் செய்த பெரோடுவா பெஸ்ஸா காரை, டிரெய்லர் லோரி ஒன்று மோதி தள்ளியதாக மலேசிய தீயணைப்பு,மீட்புப்படையின் கெடா மாநில பொது உறவு அதிகாரி அப்துல் ரஹ்மான் சோ ஒமார் தெரிவித்தார்.
இதில் 32 வயது ஆடவர், 30 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்கள், எட்டு மாத கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


