நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு கோருவதற்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணைக்குட்பட்ட நபர்கள் இனி ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் உடையை அணிய வேண்டியதில்லை என எஸ்பிஆர்எம் உடனடியாக அறிவித்துள்ளது.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது விசாரணைக்குட்பட்டவர்கள் சாதாரண உடைகளை அணியலாம் என்றும், ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் உடை அவர்கள் லாக்கப்பில் இருக்கும் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
கைவிலங்கு அணிவிப்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கைவிலங்கு அணிவிப்பதில் விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, விசாரணைக்குட்பட்டவர்களை கையாளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உறுதி செய்யப்படும் எனவும் எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.








