Sep 4, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு ஒத்துழைப்பவர்களுக்கு ஏன் ஆரஞ்சு உடை? – அன்வார் கேள்வி
தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு ஒத்துழைப்பவர்களுக்கு ஏன் ஆரஞ்சு உடை? – அன்வார் கேள்வி

Share:

லஞ்ச ஒழிப்புக்கான விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் நபர்களை மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்- ஆரஞ்சு நிற தடுப்புக் காவல் உடையை அணியச் செய்ய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிற உடையை அணிவிப்பது, அவர்கள் மீது பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.

வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் எந்த நிற உடையை அணிய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்யலாம் என்றும் அன்வார் தெரிவித்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்கும் நிலையில், ஆரஞ்சு நிற உடையை அணிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, 2022ஆம் ஆண்டு, ஜசெக-வின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேக நபர்களுக்கு ஆரஞ்சு நிற உடை அணிவிப்பது தொடர்பில் போலீஸ் மற்றும் எஸ்பிஆர்எம் தெளிவான விதிமுறைகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

Related News

நேபாள வெள்ளப்பேரிடர்: 55 மலேசியர்களின் குடும்பங்களுக்கு தமிழில் ஆறுதல் தேவை – ( மாஸ்பி) அமைப்பு உருக்கமான வேண்டுகோள்

நேபாள வெள்ளப்பேரிடர்: 55 மலேசியர்களின் குடும்பங்களுக்கு தமிழில் ஆறுதல் தேவை – ( மாஸ்பி) அமைப்பு உருக்கமான வேண்டுகோள்

சிங்கப்பூர் நில விற்பனை வரிக்கு அஞ்சவில்லை – ஜோகூர் இடைக்கால சுல்தான் திட்டவட்டம்

சிங்கப்பூர் நில விற்பனை வரிக்கு அஞ்சவில்லை – ஜோகூர் இடைக்கால சுல்தான் திட்டவட்டம்

நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் சந்தேக நபர்களுக்கு ஆரஞ்சு உடை இல்லை – எஸ்பிஆர்எம் அதிரடி முடிவு

நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும் சந்தேக நபர்களுக்கு ஆரஞ்சு உடை இல்லை – எஸ்பிஆர்எம் அதிரடி முடிவு

ஷா ஆலம் மோதலில் இளைஞர் கொலை – சகோதரர்கள் உட்பட 8 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஷா ஆலம் மோதலில் இளைஞர் கொலை – சகோதரர்கள் உட்பட 8 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

செரியனில் புகைமூட்டம் அபாய அளவைத் தாண்டியது – அவசரநிலை பிரகடனம்

செரியனில் புகைமூட்டம் அபாய அளவைத் தாண்டியது – அவசரநிலை பிரகடனம்

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்