Sep 5, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் நில விற்பனை வரிக்கு அஞ்சவில்லை – ஜோகூர் இடைக்கால சுல்தான் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் நில விற்பனை வரிக்கு அஞ்சவில்லை – ஜோகூர் இடைக்கால சுல்தான் திட்டவட்டம்

Share:

சிங்கப்பூரில் 16.6 ஹெக்டேர் நிலத்தை விற்பனை செய்வதால் விதிக்கப்பட உள்ள 4.05 பில்லியன் ரிங்கிட் வரி குறித்து தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதில் தாம் எப்போதும் தயங்கியதில்லை என்றும், இரு நாடுகளுக்கும் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலப் பரிவர்த்தனைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நில மேம்பாட்டு வரி விதிக்கப்படலாம் என அண்மையில் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஜோகூர் ஆட்சியாளருக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் இடையே நிலப் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர், ஹாலண்ட் ரோடு- டில் 16.6 ஹெக்டேர் நிலம் ஜோகூர் ஆட்சியாளரின் உரிமைக்கு வந்தது.

இந்த நிலத்தில் குறைந்த அடர்த்தியிலான குடியிருப்புகள் மற்றும் உயர்தர பங்களா வீடுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related News