Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சகத் தொழிலாளியை நரபலி கொடுத்த நபருக்கு 35 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

சகத் தொழிலாளியை நரபலி கொடுத்த நபருக்கு 35 ஆண்டு சிறை

Share:

புத்ராஜெயா,ஜன.11
லாட்டரி சீட்டில் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் சகத் தொழிலாளியை கழுத்து அறுத்து, நரபலி பூஜை கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் செம்பனைத் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

A. Francis என்ற 52 வயதுடைய முன்னாள் தோட்டத் தொழிலாளிக்கு தெமர்லோ உயர் நீதிமன்றம், விதித்த மரணத் தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், 2023 ஆம் ஆண்டு மரணத் தண்டனையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்திற்கு ஏற்ப 35 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது.

சம்பந்தப்பட்ட நபர், பிடிபட்ட தினமாக 1994 ஆம் ஆண்டு ஆகட்ஸ்ட் 26 ஆம் தேதியிலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்நபர், கடந்த 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பகாங், தெமர்லோ மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாலான் கோலாலம்பூர்- குவாந்தான் - மெந்தாக்காப் சாலையில் கிம் ஸ்வி லியோங் தோட்டத்தில் ஒரு வங்காளதேசத் தொழிலாளியான அலி அஹ்மாட் முஹமாட் உல்லா என்பவரை நரப்பலி கொடுத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்