May 5, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்: 8 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்: 8 பேர் கைது

Share:

கூச்சிங், பிப்ரவரி.08-

சரவாக்கில் கடந்த பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 3. 18 இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகளையும் வாணவேடிக்கை பொருட்களையும் காவற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சட்டத்திற்குப் புறம்பான பட்டாசு விற்பனையைத் தடுப்பதற்காக கூச்சிங், செரியான், சிபு, மிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 8 ஆண்கள் கைது செய்யப்பட்டதாக சரவாக் பொதுப் படைப் பிடிவின் மூத்தத் துணை ஆணையர் லிம் பாக் பாய் தெரிவித்தார்.

பாடாவான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 1.79 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3,922 பட்டாசு பெட்டிகளும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டதாகச் சரவாக் காவற்படையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைக்காக அந்தந்த மாவட்டக் காவல்படைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, வெடிபொருள் சட்டம் 1957-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News