உலு சிலாங்கூர், அக்டோபர்.15-
அரசாங்க ஊழியர் ஒருவர் காரில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.20 மணியளவில் உலு சிலாங்கூர், ஜாலான் பத்தாங் காலி– உலு யாம் பாரு சாலையில் ஒரு துரித உணவகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் 46 வயது மதிக்கத்தக்க அந்த அரசாங்க ஊழியர் இறந்து கிடப்பதை கண்டு, பொதுமக்கள், போலீசுக்குத் தகவல் அளித்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்திற்கு பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்த போது அந்த அரசு ஊழியர் இறந்து இருக்கலாம் என்ற நம்பப்படுகிறது.
அவர் மாரடைப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று கோல குபு பாரு மருத்துமனையில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக இப்ராஹிம் ஹுசேன் மேலும் கூறினார்.








