கோலாலம்பூர், செப்டம்பர்.27-
நேற்று வெள்ளிக்கிழமை இரவு, 'லிட்டில் பாகிஸ்தான்' என்றழைக்கப்படும், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியிலுள்ள அலுவலகங்கள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பாகிஸ்தான், இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இச்சோதனையின் போது பலர் அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், சிலர் மயக்கமடைந்து கீழே விழுவது போல் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தாமாக முன்வந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வான் முகமட் வலியுறுத்தியுள்ளார்.








