சிப்பாங், அக்டோபர்.05-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக கார் சேவையை வழங்கிய 59 வயதுடைய ஆடவர் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆறு பயணிகளிடம் இருந்து கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்ல 225 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க அவர் முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்திற்குப் புறம்பானச் செயலில் ஈடுபட்டு வந்த அந்த ஓட்டுநரின் டொயோட்டா வெல்ஃபயர் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பானச் சேவையில் ஈடுபடுவோருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று ஜேபிஜே எச்சரித்துள்ளது.








