Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் பாரு விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் கருத்திற்கு அன்வார் வரவேற்பு!
தற்போதைய செய்திகள்

கம்போங் பாரு விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் கருத்திற்கு அன்வார் வரவேற்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

கம்போங் பாருவின் வரலாறும், பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறியிருக்கும் கருத்தைத் தான் வரவேற்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சுல்தானின் கருத்தும், பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதும், நியாயமான மற்றும் சமநிலையான வளர்ச்சியை உருவாக்குவதுமான மடானி அரசாங்கத்தின் கருத்துடன் ஒத்துப் போவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் எல்லா முடிவுகளும், மக்களின் நல்வாழ்விலும், அனைத்து சமூகத்தினரின் அடையாளங்களைக் காப்பதிலும் அக்கறை செலுத்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கம்போங் பாரு விவகாரத்தில் முன்னதாக இன்று அறிக்கை விடுத்திருந்த சிலாங்கூர் சுல்தான், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாடுகளும் மலாய்க்காரர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Related News