கோலாலம்பூர், டிசம்பர்.17-
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்டியுசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தலைமைத்துவத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அதன் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.
எனினும் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழுவினரைச் சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ் அங்கீகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி தொழிற்சங்கமான எம்டியுசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
எம்டியுசியின் தலைவராக ஹாலிம் மன்சோர் தனது நிலையைத் தற்காத்துக் கொண்ட வேளையில் உறுப்பினர் தகுதி கேள்வி எழுப்பட்ட நிலையில் இருந்த கமாருல் பஹாரின் மன்சோர் எம்டியுசியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.








