கோலாலம்பூர், ஜூலை.25-
இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச இ-விசா வழங்கப்பட்டு இருப்பதைக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலேசியர்களுக்கு இந்தியா வழங்கி வந்த இ-விசா சலுகை, கடந்த ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் காலாவதியானது. இந்த ஜுலை முதல் தேதியிலிருந்து மலேசியர்களுக்கு, இந்தியாவின் இ–விசாவைப் பெறுவதற்கு சராசரி 150 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டது.
கடந்த 21 நாட்களாக 150 ரிங்கிட் கட்டண அடிப்படையில் இருந்த இ-விழா அமல், கடந்த ஜுலை 22 ஆம் தேதி முற்றாக அகற்றப்பட்டது. இந்தியாவிற்கு இரு முறை செல்வதற்கு வகை செய்யும் இந்த 30 நாள் இலவச விசா, அடுத்த 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








