மலாக்கா, டிசம்பர்.20-
கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் குறித்த சர்ச்சையைச் சுட்டிக் காட்டி, பண்டிகைக் காலத்தில் பிளவுகளை உண்டாக்காமல், ஒற்றுமையை வலுப்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்று மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இன்று வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் நடத்தப்படும் நற்பணித் திட்டங்கள் வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் பாலமாக அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மலாக்காவில் கிறிஸ்துவச் சமூகத்தைச் சேர்ந்த நலிவடைந்த 200 பேருக்கு தலா 200 ரிங்கிட் உதவித் தொகை என மொத்தம் 40 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கி, உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இதனைத் தெரிவித்தார்.
மலாக்காவில் கிறிஸ்துவப் பண்டிகையின் அலங்கரிப்பு விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.








