Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தம்

Share:

தேசிய ஒளிபரப்பு சேவை நிறுவனமான ஆர்டிஎம் மற்றும் அஸ்ட்ரோ இடையிலான சுமார் 30 ஆண்டுகால ஒத்துழைப்பு வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் கட்டண மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பான உடன்பாட்டை எட்ட இயலாததால், அஸ்ட்ரோ செயற்கைக்கோள் மற்றும் ஓ.டி.டி தளங்களில் இருந்து ஆர்.டி.எம் தனது டிவி1-எச்டி, டிவி2-எச்டி மற்றும் ஓகே அலைவரிசைகளின் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அலைவரிசைக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அதை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆர்டிஎம் இன்று விளக்கமளித்துள்ளது.

Related News

ஜூலை 1 முதல் அஸ்ட்ரோவில் ஆர்டிஎம் அலைவரிசை ஒளிபரப்பு நிறு... | Thisaigal News