Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி
தற்போதைய செய்திகள்

கல்விக்குக் கரம் கொடுக்கும் மித்ரா: மடிக்கணினி பெற்ற உயர் கல்விக்கூட மாணவர்களின் நேரடிப் பேட்டி

Share:

கல்வி ஒன்றே ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் உன்னத ஆயுதம் என்பதை மித்ராவின் மடிக்கணினி விநியோகத் திட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. உயர்கல்விக்கூடங்களில் பயிலும் பி40 பிரிவு இந்திய மாணவர்களின் டிஜிட்டல் கல்வித் தேவையை உணர்ந்து, அதனைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்த மித்ரா அமைப்பிற்கும், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திர நாயருக்கும் மாணவர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை திசைகளிடம் பதிவு செய்தனர். .

இன்றைய நவீன உலகில், மடிக்கணினி என்பது வெறும் ஆடம்பரப் பொருள் அல்ல; அது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அத்தியாவசியக் கருவி. இந்த மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் தங்களின் உயர்கல்வியில் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்று, நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க ‘திசைகள்’ குழுமத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related News