Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தொடை எலும்பு முறிவு - போலீஸ் விசாரணை

Share:

கெடா மாநிலம் சுங்கை பட்டாணியில் உள்ள மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்றுவந்த 13 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தொடை எலும்பு முறிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் புகார் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த திங்கட்கிழமை அக்குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம், பிரிவு 31(1)(a) கீழ் அலட்சிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்குழந்தையின் தந்தையான நூர் ஃபட்லி ஷைதி மற்றும் அவரது மனைவி நூர் ஷாஹிலா அப்துல் ஹமீத் ஆகியோர் தங்கள் குழந்தையின் வலது தொடைப் பகுதியில் கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்ட பிறகே, இந்தச் சம்பவம் குறித்து அறிந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தபோது, அக்குழந்தை இயல்பான நிலையில் இருந்ததாகவும், இரு கால்கள் உட்பட அனைத்து உறுப்புகளையும் முறையாக அசைக்கக்கூடிய நிலையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு