Sep 26, 2026
Thisaigal NewsYouTube
புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன்  உறுதி
தற்போதைய செய்திகள்

புதிய மைக்காட் அறிமுகம்: அரசு உதவிகள் பாதிக்கப்படாது என ஜேபிஎன் உறுதி

Share:

வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள புதிய கட்டமைப்புடன் கூடிய மைக்காட் மாற்றத்தினால், அரசாங்கத்தின் நிதியுதவிகள் வழங்கும் செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் உறுதியளித்துள்ளது.

சாரா எனப்படும் சும்பங்கான் அசாஸ் ரஹ்மா, / புடி மதானி ரோன்95 போன்ற மைக்காட் வழி பெறப்படும் உதவிகள் தடையின்றித் தொடரும். தற்போதைய பயனாளிகளின் விவரங்கள் மத்திய தரவுத்தள அமைப்பில் தானியங்கி முறையில் மாற்றப்படுவதால், தகுதியானவர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று ஜேபிஎன் உத்தரவாதம் அளித்துள்ளது.

புதிய மைக்காட்டானது, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அடையாளப் பகிர்வை மேலும் பலப்படுத்தும். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இந்த அடையாள அட்டை மாற்றங்கள் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் ஜேபிஎன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News