Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் படகு விபத்து: மேலும் 4 பெண்களின் சடலங்கள் மீட்பு

Share:

பங்கோர் தீவு அருகே 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், நேற்று மாலை மேலும் 3 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் சடலமாக மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படகு கவிழ்ந்த முதல் நாள் அன்று, 23 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீதமுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் கடலோரக் காவல் படை, மலேசியக் கடற்படை உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

37 ஆவணமற்ற குடியேறிகளுடன் கடந்த மே 9-ஆம் தேதி இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவை நோக்கி, அப்படகு வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News