May 13, 2026
Thisaigal NewsYouTube
ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி
தற்போதைய செய்திகள்

ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை அணையர் உறுதி

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்-இன் புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், நாடு முழுவதும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுங்கீனச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

புத்ராஜெயா தலைமையகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஆற்றிய முதல் உரையில், ஆணையத்தை வழிநடத்த அரசாங்கம் தம் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை நேர்மையுடனும் தொழில்முறைத் திறனுடனும் நிறைவேற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில், கடமைகளை நிறைவேற்றுவதில் சவால்கள், கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அப்துல் ஹலீம் அமான், அவற்றையெல்லாம் விவேகத்துடனும், சட்டத்தின் வழிகாட்டுதலின் படியும், நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் படியும் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்று மே 13 ஆம் தேதி முதல் 2028 ஆம் ஆண்டு மே 12 -ஆம் தேதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அப்துல் ஹலீம் அமான் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News