Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மாற்றுத்திறனாளிக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாற்றுத்திறனாளிக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை

டிச.3-

மற்றவர்களைப் போல தாங்களும் சுயகாலில் நிற்பதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளிக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அதீத முன்னுரிமையை வழங்கும் என்று அதன் அமைச்சர் Datuk Seri Nancy Shukri தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வேலை வாய்ப்புகளில் குறிப்பாக அரசாங்க வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்புக்கான விழுக்காடு, இன்னும் மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பொதுச் சேவைத்துறையில் மாற்றுத்திறனாளிக்கான வேலை வாய்ப்புக்குரிய விகிதம் குறைந்த பட்சம் ஒரு விழுக்காடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த ஒரு விழுக்காட்டைக்கூட மாற்றுத் திறனாளிகள் இன்னும் நிறைவு செய்யவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

இன்று டிசம்பர் 3 ஆம் தேதி, கோலாலம்பூரில் மாற்றுத்திறனாளிக்கான தினத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் i Nancy Shukri இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →