கோலாலம்பூர், ஜனவரி.05-
பாஸ் கட்சித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனும், சுங்கை பூலோ பாஸ் தொகுதித் தலைவருமான ஸாஹாருடின் முஹமட், கோலாலம்பூரில் உள்ள கம்போங் சுங்கை பாருவில் நடைபெற்ற சட்டவிரோதப் பேரணியில் பங்கேற்றதாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியன்று, கம்போங் சுங்கை பாருவில் உள்ள வீடுகளைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட சட்டவிரோதப் பேரணியில் பங்கேற்றதாக ஸாஹாருடின் முஹமட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முஹமட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஸாஹாருடின் முஹமட், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். அவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.








