நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் மட்டுமே இருக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசுப் அறிவித்துள்ளார்.
ஆற்றல் சேமிப்பு மற்றும் மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அரசு ஊழியர்கள் நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பத்திக், கார்ப்பரேட் சட்டைகள் அல்லது பாஜு மெலாயு போன்ற ஆடைகளை அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் அரசாங்கம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று துணைப்பிரதமர் இன்று விளக்கினார்.








