Feb 14, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டு விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டு விடுமுறை: முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் முக்கியச் சாலைகளில் இன்று சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தகவல்படி, கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் உள்ள கெந்திங் செம்பா டோல் சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது. அதே போல், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ரவாங் முதல் புக்கிட் பெருந்தோங் வரையிலும், ஸ்கூடாய் முதல் கூலாய் வரையிலும் வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளும் இந்த மெதுவான போக்குவரத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தின்படி, போர்ட்டிக்சன் – செனாவாங் சாலையின் 259. ஆவது கிலோமீட்டர், தாப்பா – கோப்பேங் சாலையின் 300.3 ஆவது கிலோமீட்டர் மற்றும் சுங்கை புவாயா - புக்கிட் பெருந்தோங் சாலையின் 429.4 ஆவது கிலோமீட்டர் ஆகிய இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் நாடு முழுவதும் சுமார் 32.7 லட்சம் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என நெடுஞ்சாலை வாரியம் முன்னதாகக் கணித்திருந்தது. இதில் சுமார் 22 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு: அன்புக்குரியவர் தின விற்பனையைப் பாதித்த சீனப் புத்தாண்டு விடுமுறை

எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி

எல்ஆர்டி3 தொடக்கத்தை விரைவுபடுத்த போக்குவரத்து அமைச்சகம் முயற்சி

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது

சீனப் புத்தாண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: கிள்ளான் ஜெயண்ட் பேரங்காடியில் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் ஆய்வு

சீனப் புத்தாண்டு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம்: கிள்ளான் ஜெயண்ட் பேரங்காடியில் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் ஆய்வு

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி