செபாங்,ஆகஸ்ட் 12-
செர்டாங் மருத்துவமனையில் ஒரு மருத்துவரைப் போல சுமார் ஒரு வாரம் காலம் ஆள்மாறாட்டம் செய்த 14 வயது பெண், ஏற்கனவே மருத்துவமனை ஒன்றில் மன நல சிகிச்சைப்பெற்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் சிகிச்சைப்பெற்ற அந்த இளம் பெண், தொடர்ந்து சிகிச்சைப் பெறத் தவறிவிட்டார். இதன் தொடர்பில் அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனோரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் செர்டாங் மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண், இரண்டு நாள் தடுப்புக்காவலுக்கு பின்னர போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினரகளை விசாரணை செய்ததில் இது தெரியவந்துள்ளது என்று Datuk Hussein Omar தெரிவித்தார்.
அந்தப் பெண் சம்பந்தப்பபட்ட விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அந்தப் பெண்ணின் விவகாரம் சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.








