Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்
தற்போதைய செய்திகள்

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

Share:

கோத்தா பாரு, கெத்தேரே பகுதியில் உள்ள கம்போங் சிமா அருகேயுள்ள நெல் வயல் பகுதியில், நேற்று 61 குத்துக்காயங்களுடன், 19 வயது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக இரு ஆண்கள் 7 நாட்களுக்கும், ஒரு பெண் உட்பட இரு மூத்த குடிமக்கள் 3 நாட்களுக்கும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில், குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக, 19 வயதுடைய இரு இளைஞர்கள், 66 வயது முதியவர் மற்றும் 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அமிருல் அஷ்ரஃப் அப்துல் ரஷித், நீதிமன்றக் காவல் உத்தரவை பிறப்பித்தார்.

அதன் படி, இன்று சனிக்கிழமை முதல், நீதிமன்றக் காவலானது அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News