Oct 16, 2026
Thisaigal NewsYouTube

18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தார்

விலங்கு உணவு பொருட்களில் குறிப்பிட்டத் தகவல்களைக் குறிப்பிடாமல் இருந்ததற்காக ஒரு விலங்கு உணவு நிறுவனத்தின் இயக்குநருக்கும் அந்த நிறுவனத்திற்கும் காஜாங் நீதிமன்றத்தால் Majistret Fatin Dayana Jalil 18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தார்.

2012 ஆம் ஆண்டு விலங்கு உணவு விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். குறிப்பாக, உணவுப் பொருட்களின் தயாரிப்பு நாடு, தயாரிப்பாளரின் பெயர், முகவரி போன்ற முக்கியத் தகவல்கள் உணவுப் பொருட்களின் பொட்டலத்தில் இடம்பெறவில்லை. எனவே அந்த நிறுவனத்தின் இயக்குநர் 31 வயது Leong Chui Hoeக்கும் Petsome (EU) Sdn Bhd, நிறுவனத்திற்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

கால்நடை சேவைகள் துறையினர் நடத்திய சோதனையில் இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்த 21 வகையான விலங்கு உணவுப் பொருட்களில் இந்த விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை.

குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால், நான்கு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தார் | Thisaigal News