ஜார்ஜ்டவுன், அக்டோபர்.31-
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தினால் மூடப்பட்ட பினாங்கு ஜாலான் துன் சார்டோன் சாலை அனைத்து வகையான போக்குவரத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திறக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவினால் அந்த பிரதானச் சாலையில் மலைப் போல் குவிந்துள்ள மண், பாறைகள், மரங்கள், கற்கள் அனைத்தும் முழமையாக அகற்றப்பட்டு விட்டதாக பினாங்கு போக்குவரத்து, இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் தெரிவித்தார்.
துப்புரவு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னரே ஜாலான் துன் சார்டோன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஸைரில் கீர் குறிப்பிட்டார்.








