Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மின் துணை நிலையத்தில் தீ
தற்போதைய செய்திகள்

மின் துணை நிலையத்தில் தீ

Share:

கோலாலம்பூர், மிட் வேலி பேரங்காடியில் உள்ள தெனாகா நேஷ்னல் பெர்காட் மின் துணை நிலையம் திடீரென்று தீபற்றி எறிந்தது.

இன்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், துணை மின் நிலையத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய வேளையில், அந்தப் பேரங்காடியின் அருகில் அமைந்துள்ள பெடரல் நெடுஞ்சாலை வழியாகச் சென்றவர்களால் அச்சம்பவத்தைப் பார்க்க முடிந்தது.

தீ விபத்து குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்ற வேளையில், மிட் வேலி க்குச் செல்லும் இரு முதன்மை சாலைகளும், மிட் வேலி பேரங்காடியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Related News