கோலாலம்பூர், நவம்பர்.08-
கேஎல்ஐஏ டெர்மினல் 1-இல் ஏரோடிரேன் சேவையானது, தினமும் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று கேஎல்ஐஏ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆய்வு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், ஏரோடிரேன் சேவை இல்லாத நேரத்தில், ஷட்டல் பேருந்துகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படும் என்றும் நேற்று தனது முகநூல் பதிவில் கேஎல்ஐஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான சேவையை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.








