முஸ்லிம் அல்லாதவர்கள் ராயா திறந்த இல்ல நிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஜசெக கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினர் உமர் பகாரிப் அலி தெரிவித்துள்ளார்.
அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும்போது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை ஏற்பாட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சிகள் வழிபாட்டு தலங்களில் நடத்தப்படக்கூடாது என்றும், எந்த மத சடங்குகள் அல்லது நடைமுறைகளும் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது வெறும் சமூக நிகழ்ச்சியாக, மத சார்பற்றதாக இருந்தால், அதை நடத்துவது பரிந்துரைக்கப்படுகிறத என்றும் உமர் பகாரிப் குறிப்பிட்டுள்ளார்.








