Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா?
தற்போதைய செய்திகள்

ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா?

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அசாம் பாகியின் பணி ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். இன்று அலோஸ்டாரில் மடானி மலேசியாவின் ஹரி ராயா பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
லத்திஃபா கொயா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை பொறுப்பை ஏற்ற அசாம் பாக்கியின் பணி ஒப்பந்தக் காலம் வரும் மே 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Related News