சிரம்பான், நவம்பர்.20-
சிரம்பான் நுசாரி பிஸ் செண்டாயானிலுள்ள உணவகம் ஒன்றில், நேற்று இரவு, உணவருந்திக் கொண்டிருந்த ஆடவர் ஒருவரை நோக்கி, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ,நேற்று புதன்கிழமை இரவு 11.25 மணியளவில், பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவரும், உதவி ஆணையருமான அஸாஹார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் படி, அந்த ஆடவர் உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இரண்டு வாகனங்களில் வந்த இருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தப்பிக்க முயன்ற அந்த ஆடவரின் மேல் குண்டுகள் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக நம்பப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் அஸாஹார் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.








